திங்கள், 31 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்


புலிப்பாணி ஜோதிடம் 300;சனிபெயர்ச்சி ராசிபலன்;shani peyarchi 2012

பாரபட்சமில்லாத நீதிதேவன் சனிபகவான் .தனது தசா காலத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு நற்பலனை அள்ளி வழங்கியும்,பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அள்ளி வழங்ககூடியவரும் ஆவார்.துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் அடையும் காலம் இது என்பதால்தான் நீதி,நேர்மை,ஊழலற்ற அரசு என மக்கள் கொதித்தெழுகின்றனர்.நீதிமன்றம் தவறு செய்தவர்களுக்கு கிடுக்கி பிடி போடுகிறது.சர்வாதிகாரமாக நடந்த கடாபி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.அதே போல இலங்கை தமிழர்களை கொன்று குவித்த,ராஜபக்சேவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.அநீதி தோற்று நீதி வென்று மக்கள் நிலங்களை களவாடிய முன்னாள் மந்திரிகள் எல்லாம் சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

சனிபகவான் யோகிகளின் தியானத்துக்கு உரிய அவதூத தத்துவத்தின் அடையாளமாக விளங்ககூடியவர்,எவ்வளவு வலிமை உடையவர்களாக இருப்பினும் அடக்கி ஒடுக்கிவிடும் வலிமை பெற்ற்வர்.

புலிப்பாணி ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது.ஏழரை சனியில் என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சொல்கிறார்.ஒரே பாடலில் சுருக்கமாக.

’’பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்
பாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்
சீரப்பா சிரநோயும் அம்மைபேதி
சிவசிவ சலபயமும் பொருளும்சேதம்
கூரப்பா குடியோடிப் போக செய்வன்
கொற்றவனே குடும்பத்தில் களவு போகும்
வீரப்பா வெகுபேர்க்கு கொடியோனாகி
விளங்குவான் புவிதனிலே விளம்பகேளே’’

விளக்கம்;

கோட்சாரப்படி ஜென்மராசிக்கு12,1,2 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டு சனி என்பர்.இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலி,அம்மை,பேதி எனக்கூறும் கொள்ளை நோயும்,ஜலபயமும்,பெரும்பொருள்சேதமும் உண்டாகும்.குடும்பத்தில் களவு போகுதலும்,இக்காலகட்டத்தில் இவன் பல பேர்க்கு கொடியவனாக விளங்குவான்..என புலிப்பாணி கூறுகிறார்.

இன்னொரு பாடலில்..எந்தெந்த ராசியினருக்கு அதிக தீமையும்,நன்மையும் ஏழரை சனி செய்யும் என விளக்குகிறார்;

’கேளப்பா கடகம் தேள் சிம்மம் ஜென்மம்
கெடுதி மெத்த செய்வனடா வேதைதானும்
நாளப்பா நலமாகும் மற்றை ராசி
நற்சுகமும் கிட்டுமடா வேட்டலுண்டு
கூளப்பா கோதையினால் பொருளுஞ்சேதம்
கொற்றவனோ கடனும் வந்து தீரும் என்றே
ஆளப்பா திசை பாரு வலுவை நோக்கி
அப்பனே முடவன்சேய் வலுவைக்கூறே’’

விளக்கம்;

கடகம்,விருச்சிகம்,சிம்மம்,ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு மிக கெடுதியையே சனி விளைவிக்கிறார்.மற்றைய ராசிகளுக்கு அதிக தீமை இல்லை.மாறாக நன்மைகள் அதிகம் விளையும்.கடன் ஏற்பட்டு தீரும்.தீரும் நோயாக வந்து போகும்..சனி,செவ்வாய் வலு இருப்பவருக்கு ஏழரை சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை எனவும் சொல்கிறார்...

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்

உங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்;

நல்ல நேரம் சதீஷ்குமார்



வீமகவி ஜோதிடம் அற்புதமான ஜோதிட நூல்.இது பழமையானது.இந்த புத்தகத்தில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் உங்கள் ராசிப்படி வீடு எப்படி அமைந்திருக்கும்..அதன் திசை விவரம்..அருகில் இருக்கும் அடையாளம் எல்லாம் சொல்லி வியப்புண்டாக்குகிறார்கள்..அக்காலத்தில் இதனை கணித்து நூலாக வெளியிட்ட ஜோதிட மேதை மன்னச்சி நல்லூர் பேட்டை குப்புசாமி அய்யா அவர்களை வணங்கி இதை வெளியிடுகிறேன்...

இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை நேரம் இருக்கும்போதெல்லாம் வெளியிடுகிரேன்..ஜோதிட ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

சனி, 29 அக்டோபர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்

சனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.

சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சனி காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.

தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்..? என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.

தனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.

.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.பூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.

11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.

வங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்விற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

இக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


வெள்ளி, 28 அக்டோபர், 2011

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்

ரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;

ரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.

நான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்துள்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்

கருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்

என் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்;


தீபாவளி பண்டிக்கைகாக இந்த வருடமும் மாமனார் வீட்டுக்கு போக கூடாது..நம் ஊரிலேயே இருந்துவிடலாம்.என்றுதான் இருந்தேன்.விடுமுறை நாள் என்பதால் ஜோதிடம் பார்க்க இப்பதான் சவுகரியமா இருக்கு..டைம் சொல்லுங்க..என ஃபோன் செய்துகொண்டே இருந்தனர்.இந்த வருடம் எந்த ஊருக்கும் போகாமல் தொழிலை கவனிக்கலாம் என நினைத்தேன்.விதி என் மச்சினன் வழியில் வந்தது..எங்களை அழைத்து செல்ல ஊருக்கு வந்துவிட்டான்.முதல் நாள் தீபாவளி பர்ச்சேஸ் எல்லாம் முடிந்ததும் அடுத்த நாள் என் மனைவி ஊருக்கு கிளம்ப தம்பியுடன் ரெடி.நீங்க எப்பங்க வரீங்கன்னு கேள்வி வேற.ஊருக்கு போகலாம்னு நான் சொல்லவே இல்லையே.கிளம்பி நிக்குற ..முறைத்தபடி கேட்கிறேன்..அதுக்குள்ள என் மகள் அவசர அவசரமா அவள் சின்ன பேக் எடுத்து தோள்ள...மாட்டிகிட்டு அப்பா ஊருக்கு வரும்போது குச்சி மிட்டா,கரடி பொம்ம,ஐஸ்க்ரீம்..அப்புறம் உனக்கு பிடிச்சது எல்லாம் எனக்கு வாங்கிட்டு வா.நாங்க டாட்டா போறோம்னு சொல்லிட்டு ஆளுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க.வேற வழியில்லாம நானும் அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டியதாயிடுச்சி.

திங்கள், 24 அக்டோபர், 2011

ஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்

அதென்ன ஏழாம் அறிவு..? முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ..? மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..!!

1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

2.தட்டான் தாழ்ப்பறந்தால் மழை

3,அந்தி ஈசல் அடை மழை

4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை

5.தவளை கத்தினால் மழை

6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை

7.கொக்கு மேடேறினால் மழை

8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.

9.கழுதை காதை உயர்த்தினால் மழை

10.ஈசல் பறந்தால் மழை


11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்

12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்

13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.

14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்

15.மயில் நடனமிட்டால் மழை வரும்

16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்

17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்

18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்

19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.

20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.

இன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி..? மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;

முக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,


ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
நீர்ப்படும் சொறித்தவளை கூப்பிடுகுதே
என மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.


எங்க ஊர்ல இப்ப நல்ல மழை! அதான் இந்த சிறப்பு மழை பதிவு!!




வீமகவி ஜோதிடம்

வீமகவி ஜோதிடம்;

வீமகவி இது ஒரு பழமையான ஜோதிட நூல்.பல புகழ் பெற்ற ஜோதிடர்களுக்கும்,ஜோதிடம் கற்பவருக்கும் அடிப்படை நூல்களில் இதுவும் ஒன்று.ஜாதகத்தை பார்த்ததும்..வீமகவி புத்தகத்தில் இது எத்தனாம் பக்க பாடலுக்கு இந்த ஜாதகம் பொருந்தும் என மனதிற்குள்ளாகவே புத்தகத்தை புரட்டி,கண்டுபுடித்து,அதை ராகம் போட்டு பாடி...இப்படிதானே உன் நிலமை இன்று இருக்கிறது ..? என கேட்டு,ஜாதகம் பார்க்க வந்தவரை மெய்சிலிர்க்க வைக்கும் ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்...இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.அதில்தான் ஜோதிடம் படிப்பவரின் திறமை இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதை சரியான ஜாதகம் வரும்போது நினைவுக்கு கொண்டு வந்து வந்தவர்களின் சிரமம் போக்க வழியுண்டா என ஆராய வேண்டும்.


ஜோதிடத்தில் பல புதுமையான கருத்துக்களை சொல்வதில் புலிப்பாணி ஜோதிட நூலுக்கு இணையானது.ஆனால் இது இன்னும் வித்தியாசமானது.ஓலைச்சுவடி வடிவில் பல தலைமுறைகளாக குரு சிஷ்யன் முறையில் பரிமாறப்பட்ட இதன் ரகசியங்கள் முதன்முதலில் மன்னச்சி நல்லூர்பேட்டை சோதிடம் குப்புமுத்து செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.சிலர் இவர்தான் இயற்றினார் என்றும் கூறுவர்.இது நூலாக வெளிவந்த ஆண்டு தெரியவில்லை.(மிக பழமையான அச்சு முறை)


வீமகவி ஜோதிட பாடல்;

காணும் லக்கினத்தில் செவ்வாய் கருங்கோழி மதியும் நின்றால்;
வானுரவீட்டுக்குள்ளே வம்சமும் அஞ்சு சொல்லு
காணுரரெண்டு பேருக்கு சந்ததி இல்லைகாணு
தானுரவொருவனுக்கு தாரமும் ரெண்டு சொல்லே.


விளக்கம்; நீ பார்க்கும் ஜாதகத்தில்,லக்கினத்தில் செவ்வாய்,சனி,சந்திரன் நின்றால்,அவரது வீட்டில் ஐந்து வம்ச மக்கள் வாழ்ந்தார்கள்;அதில் இரண்டு பேருக்கு சந்ததி இல்லை;இன்னொருவருக்கு இரண்டு மனைவி என்பதை அழகாக குறித்து சொல்லும் பாடல் இது..


.(தொடரும்)


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்;


புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்;

பாடல்;


''வீரப்பா யின்னமொரு புதுமை கேளு
விளம்புகிறேன் வீரியன் வீட்டில் தானும்
ஆரப்பா அசுரர்குரு செவ்வாய் கூடில்
அப்பனே அம்மங்கலையை அணைத்து வாழ்வான்
கூரப்பா குமரனுக்கு வித்தை புத்தி
குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே''


விளக்கம்;

இதுவரை சொல்லியதைவிட இன்னொரு புதுமையான கிரக அமைப்பை கொண்ட ஜாதகரை பற்றி கூறுகிறென் கவனமுடன் கேட்பாயாக.சூரியனின் வீடான அதில் சுக்கிரனும் ,செவ்வாயும் சேர்ந்திருப்பானாயின் இந்த ஜாதகர் கணவனை இழந்த பெண்ணை மணந்து வாழ்வான்.ஆனால் அவன் தொழில் சிறந்து புத்தி கூர்மையுடன் இருப்பான்.தவிர செல்வந்தனாகவும்,சிற்ப சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருப்பான்,நூல்களை ஆராய்ச்சி செய்பவனாகவும் இருப்பான்.இதனை போகருடைய கருணையினால் கணித்து புலிப்பாணி சொல்லியுள்ளேன்.

சனி, 22 அக்டோபர், 2011

ரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..?

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத ரஜினி;


சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ,ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை.இதற்கு காரணம் அவரது உடல்நலன் பாதிப்புதான் என தெரிகிறது.அவர் ஓய்வு எடுத்து வரும் இந்த சூழலில் வாக்களிக்க வந்தால் பத்திரிக்கையாளர்கள் அவரை தொந்தரவு செய்வர்..கருத்து சொல்ல வலியுறுத்துவார்கள்.இப்போதிருக்கும் சூழலில் ரஜினி கருத்து சொன்னால் அது வீண் சர்ச்சையாகும் என்றே ரஜினி வாக்களிப்பதை தவிர்த்துவிட்டாராம்.

அடுத்த நாள் ரஜினி திருப்பதி சென்று துலாபாரம் அமர்ந்து எடைக்கு எடை கல்கண்டு இனிப்பு பெருமாளுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.ரஜினி நலம் பெற வேண்டி அவரது மனைவி மொட்டையடித்துள்ளார்.ரஜினி ஓய்வு பெறும் இக்காலகட்டத்தில் அதாவது மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் இன்னும் ஒரு வார்த்தை கூட மீடியாவிடமோ,ரசிகர்களிடமோ பேச வில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் என்ன என்பதை நான் எழுதிய ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது என்ற பதிவிலும்,ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனையா பதிவும் குறிப்பிட்டுவிட்டேன்.ரஜினி பூரண நலம் பெற நானும் வணங்கும் திருமலை திருப்பதி பாலாஜி யை பிரார்த்திக்கின்றேன்.

ஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும் பாகம் 2

ஜோதிடம்,ஜாதகம்,திருமண பொருத்தம்,நியூமரலாஜி;நல்லநேரம் சதீஷ்

சோதிடம் சதீஷ்னு பெயர் வெச்சு எழுதுனேன்..கூகிள் காரங்களுக்கு டவுட் வந்து எங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு.அதன்படி இந்த பெயர் செல்லாது.அதனால வெற பெயர் வெச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்க...இப்போ josiyam sathishkumar னு மாத்தியிருக்கேன்.இதுக்கும் ஆட்சேபம் தெரிவிச்சா நல்ல நேரம் சதீஷ்குமார் னு மாத்திடலாம்னு ஐடியா.என்ன சொல்றிங்க..?

நல்ல நேரம் ப்ளாக்கை ஜோதிட பதிவு தளமா இல்லாமல் பொழுது போக்கு தளமாக எல்லா மேட்டரும் இருக்கும்படியா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.உங்களுக்கும் போரடிக்கும் இல்லையா..தினசரி ஒரு ஜோதிட பதிவு ,அரசியல்,சினிமானு மசாலாவா இருக்கணும்னு நினைக்கிறேன்.ஆனா டைப் பண்றதுதான் கஷ்டம்.இருப்பினும் ஜமாய்ப்போம்.
------------
ஜாதகத்தில் ராகு அமர்ந்த நிலை பலனுக்கு நல்ல வரவேற்பு.ஜாதகத்தில் லக்கினம் என போட்டிருக்கும் இடத்தை ஒன்றாம் வீடாக வைத்து,எத்தனாவது கட்டத்தில் ராகு இருக்குன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.அதன்படி பலன்களை பார்க்கலம்.ஒவ்வொரு ராசிக்கும் பத்து பக்கம் எழுதும் அளவு பலன்கள் இருப்பினும்..நான் நாலே வரியில நச்சுன்னு முடிக்கணும்னு நினைக்கிறேன்.என்னோட எழுத்து முகத்துல அறைஞ்சாற்போல இருக்கும்.இது பலருக்கு வருத்தம் கொடுத்தாலும் என்ன செய்றது வழ வழன்னு எழுதறதுல,சாஃப்ட்டா எழுதறதுல ஒரு பலனும் இல்லை.ஜோசியம்னா அதிரடியா இருக்கணும்.நான் எழுதிய விஜயகந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..? என்ற் கணிப்புகள் உள்ளாட்சி தேர்தல் முடிவில் பலித்ததாக பாராட்டிய நண்பர்களுக்கும்,ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவில் டிசம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கே வெற்றி என நான் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்தி வாழ்த்திய நபர்களுக்கும் நன்றி.

ராகு அமர்ந்த ராசிபலன் இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு செல்லவும்..

7ல் ராகு அம்ர்ந்த பலன்; தவறு செய்வது மனித இயல்பு.ஆனால் இவர்களுக்கு அது பொழுதுபோக்காக அமைந்துவிடும்.கோயிலுக்கும் போவாங்க..பலான மேட்டருக்கும் போவாங்க.போகிற போக்கில் சாதரணமா செய்ற செயல் குடும்ப பெயருக்கு அவமானம் தரும்.பெரிய குடும்பமாக இருந்தாலும் மோசமான இடத்துக்கு சென்று தலைகுனிவை குடும்பத்துக்கு உண்டாக்குவார்..ஜாதகருக்கும் நிம்மதி இல்லை.சம்பிரதாயம்,ஜோசியம் நு இவர் கிண்டல் பண்ணாத விசயமே இல்லை.பகுத்தறிவு பேசுவார்.பிரச்சனை வந்தா சித்தர்களை வழிபடுவார் யோகா,தியானம் செய்வார்.மனசுதான் கடவுள் என பினாத்துவார்.ஆனா இதை சொல்லிகிட்டே இவர் செய்ற சேட்டைகள் இருக்கே.குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை.வீட்டுக்கு போனா துக்கம்னு நண்பர்களெ கதின்னு இருப்பார்.

8 ல் ராகு;பொருளாதார ஏற்றதாழ்வு.போதுமான வருமானம் இன்மைமருத்து பேசுவதே மனைவியின் குணம்.உறவினர்,நண்பர்கள் உறவுகள் கெடும்.பேச்சு அந்த மாதிரி.மோசமான திசாபுத்தி நடந்தா கஷ்டம்,நஷ்டம் அதிகரிக்கும்.குறுக்கு வழியில் பணம் செரும்.

9ல் ராகு;மத நம்பிக்கைகளை மறந்தவர்.தகப்பன் சொல் கேளாதவர்.தகப்பன் வழி சொந்தம் எதிரி.ஜோசியம்,கடவுள் நம்பிக்கை கொண்டாரை கண்டால் எள்ளி நகையாடுவார்.மனைவி சொல்லுக்கு மகிமை உண்டு.முதலாளி ஆக முடியாது.ஆனாலும் நிலைக்காது.பிள்ளை பிறப்பது தாமதிக்கும்.5,9 கெட்ட்டிருந்தால் அதுவும் இல்லை.5 ஆம் இடம் நன்றாக இருந்தால் கூட பிள்ளை உண்டு.

10 ல் ராகு;பல தொழில் செய்யும் யோகம்.நிறைய பணம் சம்பாதிப்பார்.ராகு திசை வந்தால் செல்வந்தர் தான்.நுட்பமான வேலைகளில் இவர்கலை மிஞ்ச ஆள் இல்லை.சினிமா,டிவி ,என இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.கமிசன் தொழிலில் செமையாக சம்பாதிக்கிறார்கள்.ரியல் எஸ்டேட் பணம் குவியும்.பலர் குறுக்கு வழிதான்.பல தொழில் செய்வார்.அடிக்கடி தொழில் மாறுவார்.இருப்பினும் பணம் வந்துகொண்டே இருக்கும்.ராகு 10 ஆமிடம் தர்ம சிந்தனையை தருவார்.அன்ன சத்திரம் கட்டுதல்,கும்பாபிசேகம் செய்தல்,கைலாயம் யாத்திரை,சித்தர் ஜீவ சமாதி வழுபாடு,ஏழைகளுக்கு உதவுதல் என பெயர் சொல்லும் படி நடப்பர்.

11ல் ராகு;கண்டதை தின்றால் குண்டாகலாம்.கண்டதை கற்றவன் பண்டிதனா..? இவங்க அப்படித்தான்.எல்லா துறையையும் ஒரு கை பார்ப்பார்கள்.ஜாதகரின் அறிவாற்றல் நன்கு வெளிப்படும்.விவசாயம் விருத்திக்கும்.நடு ராத்திரியில் உதவின்னு கதவை தட்டினாக்கூட ஓடி வருவார்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.

12ல் ராகு;பாவ ராகுவால் சாபமே மிஞ்சும்.வாயக்கட்டி வயித்த கட்டி சம்பாதிச்சு வெச்சதெல்லாம் திசா புத்தி நடப்புக்கு வரும்போது எல்லாம் அம்பேல் ஆகும்.வாழ்வின் பெரும்பகுதி நஷ்டம்தான்.செலவுன்னா செலவு அப்படியொரு செலவு.யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காசை வீசுவார்கள்.பூர்வீக சொத்து இவர் பிறந்ததும் மறைந்துவிடும்.போதை வஸ்துக்கள் எல்லாம் அத்துபடி.குடும்ப வாழ்வு பாலைவனம்.ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்.

வியாழன், 20 அக்டோபர், 2011

ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்

ஜோதிடம்;ராகு அமர்ந்த ராசி பலன்கள்;

லக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.


ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம்

விசாகம் 4 ஆம் பாதம் முதல்,அனுசம்,கேட்டை முடிய

விருச்சிக ராசி.இது பெண்ராசி.இதன் அதிபதியாக வருகிற செவ்வாய் ஆண்கிரகம்.விடியற்காலையிலும் அந்தி பொழுதிலும் அதிக வலிமை உடைய ராசி.மனித உடலில் பிறப்பு உறுப்புகளை குறிக்கும் ராசி.திசைகளில் வடக்கை குறிக்கும்.நிறம் பொன்னிறம்.இதன் உருவகம் தேள்.இந்த ராசியில் நீசம் பெறும் கிரகம்.சந்திரன்.அதனாலோ என்னவோ இந்த ராசிக்காரர்கள் தாயின் அன்பை பெற துடிப்பர்.ஆனால் அது கிடைக்காத சூழல்.தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை.அல்லது தாயே எதிரி ஆகிவிடுவார்.இருப்பினும் தாயை பிரிந்து வாழ்வதே அதிகம் நடக்கிறது.

புதன், 19 அக்டோபர், 2011

புனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க! star astrology

நட்சத்திரத்தின் தன்மை;

இந்த நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும்.சாத்வீக குணம் கொண்டது.பிறை போன்ற வடிமைப்பு கொண்டது.கூட்டமாக உள்ள இடத்தில் காணப்படும்.நாத பிந்து என்ரு அழைக்கப்படும் ஒலிகளின் கூட்டணியில் அமைச்சரை போல போற்றப்படும்.கடவுளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அமைப்பு கொண்டது.இதன் அதிபதி குரு பகவான் ஆவார்.கணம் தேவ கணமாகவும்,மிருகம் பெண் பூனையாகவும்,விருட்சம் மூங்கிலாகவும்,பட்சி அன்னமாகவும் அமையப்பெற்று காணப்படுகிறது.இவர் காது,தொண்டை,தோள்கள்,தோள் எலும்புகள் இவற்றை ஆளுகை செய்கிறார்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை முதலில் வரும்.அதனை அடுத்து மற்ற திசைகள் வரும்.ராமர் பிறந்த புன்ணிய நட்சத்திரம்.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

புலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology

பாடல்;

கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திர கோணம் 
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த
சிவசிவ கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக்கூறே.


ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra

சித்திரை 3 ஆம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் வரை.

அன்பு,காதல்,பாசம்,நேசம் என மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதிலும்,தூண்டிவிடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.அழகான தோற்றம்,அன்பான பேச்சு என இளமையில் மட்டுமல்ல..முதுமையிலும் மன்மத ராசாக்கள் தான் இவர்கள்.பிறந்த வீட்டாருடன் பிணக்கு உண்டாகும்..தந்தை ஆகாத ராசி உங்களுடையது என்பதால் ஒரு பிரிவினையோ..அல்லது இழப்போ..கருத்து வேறுபாடோ தந்தையுடன் அடிக்கடி உண்டாவது உங்க ராசியின் இயல்பு.

அழகான மனைவி வேண்டும் என தேடிபிடித்து கல்யாணம் செஞ்சுக்கணும் என சின்ன வயதிலிருந்தே கனவு காண்பீர்கள்..அதன்படியே பெரும்பாலும் அமைத்துகொள்வீர்கள்.காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புண்டு.சுக்ரன் ராசியாச்சே.

திங்கள், 17 அக்டோபர், 2011

தமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்

தமிழ்மணம் கட்டண சேவை tamilmanam vs tamil bloggers part 2


தமிழ்மணம் நிர்வாகி என்ற பெயரில் பல வலைப்பதிவுகளில் வந்து அசிங்கமான எழுத்துக்களில்,மரியாதை இன்றி பின்னூட்டம் இட்ட பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.தமிழ்மணம் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்..இந்த நிமிடம் வரை தமிழ் மணத்தை தூக்கி எறிந்தவர்கள் ,மானஸ்தர்கள்,எண்ணிக்கை 25


தமிழ்மணம் கட்டண சேவை என்பது மற்ற திரட்டிகள் போல விளம்பரதாரர்களுக்கு அல்ல...இது பதிவர்களுக்கானது.எப்படியெனில் இவர்கள் விளம்பர கட்டண பிரிவு தொடங்கியதும் முதலில் தகவல் அனுப்பியது பதிவர்களுக்குதான்.எப்படி தெரியுமா.நாங்கள் கட்டண பிரிவை தொடங்கியிருக்கிறோம்.உங்கள் பதிவை நீங்கள் விரும்பினால் கட்டண பிரிவுக்கு மாற்றிக்கொள்ளலாம்...குறைந்த பட்ச கட்டணம் 5 டாலர்.அதிக பட்சம் 100 டாலர்.முன்பக்கம் நீல நிறத்தில் உங்கள் பதிவை தனித்து காட்ட,25 டாலர் கட்டணம்.என மெயில் அனுப்புகின்றனர்.எனக்கு இந்த மெயில் பலமுறை வந்தது.காரணம் நான் சோதிட பதிவுகள் எழுதுவதும் இல்லாமல்,அடிக்கடி பதிவு போடுவதால் இவர் ப்ளாக்கை கட்டண பிரிவுக்கு மாற்ற நிர்பந்தித்தால் மாற்றிக்கொள்வார் என்பதே காரணம்.நான் அதை கண்டுகொள்ளவே இல்லை.காரணம் கட்டண ஒஇரிவுக்கு மாற்றினாலும் நமக்கு ஒன்றும் பெரிய ஹிட்ஸ் கிடைக்காது என்பது ஒரு காரணம்.தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பகுதிக்கு என் பதிவுகள் உடனே வந்துவிடுவதும் ஒரு காரணம்.

என் ப்ளாக் திடீரென முடக்கப்பட்டது.என் ப்ளாக்கை யாரோ அழித்துவிட்டனர்.அதன் பின் தமிழ்மணம் கருவி பட்டையை இணைத்து,பார்த்தபோது என் ப்ளாக் கட்டண சேவைக்கு மாறிவிட்டதாக செய்தி வந்தது.எப்படி நான் கேட்காமல் கட்டண பிரிவுக்கு மாறியது என யோசித்து ,அவர்களுக்கு மெயில் செய்தால்,இது தொழில் நுட்ப கோளாறு..சரி செய்கிறோம்..நீங்கள் கட்டண சேவைக்கு மாறிக்கொள்ளுங்களேன் ..இன்னும் அதிக ஹிட்ஸ் கிடைக்கும் என்றார்கள்.இல்லை.எனக்கு விருப்பம் இல்லை...என்னை தர்ம தரிசனம் பகுதியிலியே அனுமதியுங்கள் என கேட்டபின்,24 மணி நேரத்தில் என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தெரிய ஆரம்பித்தது.

அதன் சில மாதம் கழித்து என் ப்ளாக் மீண்டும் முடக்கப்பட்டது..இந்த முறை என் மெயில் ஐடியையே தூக்கிவிட்டனர்...மறுபடி எல்லாம் சரி செய்து.,தமிழ்மணம் பட்டையை நிறுவினால் மீண்டும் கட்டண சேவை என பல்லிளித்தது.என்னடா..இவனுக தொழில் நுட்பம் த்தூ..என மறுபடி மெயில் செய்தால்..பழைய கேள்வி வரவில்லை....பதிலாக உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்..அல்லது கட்டண சேவைக்கு மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்...என மெயில் வந்தது..எனக்கு ஒரு எச்சரிக்கை மெயிலும் வரவில்லை.அவர்களாவே என்னை கட்டண சேவைக்கு மாற்றிவிட்டார்களாம்...அவர்களாகவே நீக்கிவிட்டார்கள்..இது சம்பந்தமாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை..அல்லது எச்சரிக்கையும் செய்யவில்லை...இவ்வளவு நாளாக சோதிடம் பதிவுகளை இணைத்துவிட்டு திடீரென ஜோசியம் ஆகாதுன்னா இத்தனை நாளா என்ன பண்ணினே...திடீரென விதிமுறை விதித்து,கட்டாயமாக திணித்து,அவர்களாகவே கட்டண சேவைக்கு மாற்றி..விரும்பினால் வா..இல்லைன்னா போ..என நடந்துகொள்வது சர்வாதிகாரம்தானே..காசி அவர்கள் தமிழ்மணத்தை துவக்கியதும்,பிற்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுதுபவர்கள் அனைவரையும் அதிகாரம் செலுத்தலாம் என்பதற்காகவா..? அல்லது தமிழ் எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடையவா..?

ஒரு தவறான பதிவு ஒரு பதிவர் எழுதுகிறார் என்றால்,அதை பர்றி அவர்தான் கவலைகொள்ள வேண்டும்.அல்லது ஆபாச பதிவு எனில் அனைவரும் குரல் கொடுத்து திரட்டியில் இருந்து நீக்கிவிடலாம்.சோதிடம் எழுதுபவனை நீக்குவோம்..என்றால் அதை நீ முழுமையாக செய்யவில்லையே..என்னை மட்டும்தான் நீக்கியிருக்கிறாய்...காப்பி பேஸ்ட் செய்பவர்களை நீக்குவோம் என்றால் குறைந்தது பத்து பேரையாவது நீக்கவேண்டும்..அதையும் செய்யவில்லை..ஒரு காப்பி பேஸ்ட் பதிவர்கள் கூட நீக்கப்படவில்லை..அப்படி நீங்கள் எத்தனை பேரை நீக்கினீர்கள்..அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி ஏன் பதிவிடவில்லை..? அப்போ இது ஏதேச்சதிகாரம்தானே..?

யாரையும் இவர்கள் நீக்கவில்லை..சிலரை பயமுறுத்தி கட்டாயமாக கட்டண சேவைக்கு மாற்றுகின்றனர்.அதற்கு முதல் பலிகடா நான்.எச்சரிக்கை மெயில் ஏன் செய்யவில்லை என நான் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.ஆத்திக பதிவை நீக்கினால் பெரியாருக்கு சொம்பு தூக்குபவனுக்கும் அங்கு வேலை இல்லையே..? அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..?

சோதிடம் வேண்டாம் எனில் ஜோசியத்தை கிண்டல் செய்பவனுக்கும் அங்கு வேலையில்லையே..?அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..?

காப்பி பேஸ்ட் பதிவு செய்பவர்களை கண்டால் மெயில் செய்யுங்கள் என்றீர்கள்.உடனே கப்சிப்புன்னு சிலர் மாறினர்.ஆனால் என் பதிவை மட்டும் முதலில் நீக்க காரணம் என்ன..? நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே..? முஸ்லீம் நண்பர்களுக்கும் இதே தான்..கட்டண சேவைக்கு மாற கட்டாயப்படுத்தி..விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்..

நான் இப்போது 25 டாலர் கட்டினாலும்,என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் பளிச்சிடும்.5000 ஹிட்ஸ் தினசரி கிடைக்கும் (அவர்கள் உறுதி கொடுக்கிறார்கள்) ஏனெனில் இன்னும் என் தமிழ்மணம் பாஸ்வேர்டு உயிரோடுதான் இருக்க்றது....இதுதான் இவர்களின் தொழில் நுட்பம்.

இவர்கள் தமிழ்மணம் கருவி பட்டை இருப்பதே அவ்வப்போது சிலரை கட்டண சேவை என மாற்றி காண்பிக்கத்தான்.புதிய பதிவர்கள் தினசரி இணைகிறார்கள்...நிறைய பேர் தங்கள் தொழில் சார்ந்து எழுதுகின்றனர்.அவர்களை குறிவைத்தே இவர்களின் இந்த புதிய கட்டாய கட்டணம் சேவை தொடங்கி இருக்கிறது...

இன்று தமிழ்மணம் பற்றி ஒரு சிறு விமர்சனம் கூட செய்ய கூடாது என்கின்றனர்.செய்தால் அந்த பதிவர்கள் நீக்கப்படுவார்களாம்...தமிழ்மணத்தை பற்றி எழுதப்பட்ட சில இடுகைகளில் வந்து பெயரிலி எனும் நாகரீகம் இல்லா மனிதன் இவர் முனைவராம்..(என்னய்யா.... நமீதா டீச்சர்கிட்ட ஆய்வு பண்ணி பட்டம் வாங்குனியா) கண்டபடி ஏசுகிறார்.தமிழ்மணம் இவரை அடியாள் வேலைக்கு வெச்சிருக்கும்போல...எங்கெல்லாம் நம்ம பத்தி மோசமா கமெண்ட் பண்றாங்களோ அங்கெல்லாம் போயி கழிஞ்சிட்டு வருவதுதான் இவர் வேலை.குட்.ஹல்லோ தமிழ்மணம் இந்தாளு குடுத்த காசுக்கு மேல கூவுறான்..நல்லா மீட்டருக்கு மேல..போட்டு கொடு..

தமிழ்மணம் என்னை என்ன நீக்குவது..என கொந்தளித்து பத்துக்கும் மேற்பட்ட பிரபல பதிவர்கள் தமிழ்மணத்தை தூக்கி கிடாசி இருக்கிறார்கள்.பதிவர்கள் மேல் தமிழ்மணம் நடத்தும் இந்த சர்வாதிகாரத்தை பல பிரபல பதிவர்கள்  சூ## பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..காரணம் இதான் நடுநிலையாம்..இப்படி இருந்துதாண்டா தமிழன் நாசமா போறான்!!

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா?


தமிழ்வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா? tamil bloggers vs tamilmanam

தமிழ்மணம் என் பதிவுகளை திரட்ட மாட்டோம் என சொன்ன பிறகு அது பத்தி எதுக்கு பேசணும் என இருந்தேன்.ஆனால் இன்று என் நண்பர்களை தமிழ்மணம் நிர்வாகிகள் படுத்தி எடுத்ததை,தனி மெயிலில் மிரட்டுவது , பார்த்த பின் ஒரு கண்டன பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இது.;


பதிவர் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய ஒரு பதிவு மிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ்மணம் பயோ டேட்டா என்ற அவரது பதிவில் தமிழ்மணத்திடம் கேட்ககூடாதது..? என்பதில் கட்டண சேவையை குறித்திருந்தார்.இது தமிழ்மணம் நிர்வாகத்தை மிக கடுப்படித்துவிட்டது.உடனே தஸ் புஸ் என ஆங்கிலத்தில் கமெண்ட் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர்.(.தமிழ் சேவை நோட் திஸ் பாயிண்ட்)

பெயரிலி என்ற,தமிழ்மண நிர்வாகி (இவரு முனைவராம்)டா,டே என பேச ஆரம்பித்தார்..உனக்கு மீசை முடி முளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா மயிரும் முளைச்சிருச்சி என்பது போல கமெண்ட் போட்டிருந்தார் (நாகரீகம் நோட் திஸ் பாயிண்ட்)

அதாவது பன்னிகுட்டி ராமசாமி பதிவில் கமெண்ட் போட்டவர்களையெல்லாம் மிரட்டி அவர்களுக்கு இப்போது ஈமெயில் போய் கொண்டிருக்கிறதாம்...உன்னை நீக்கி விடுவேன்..தமிழ்மணத்திற்கு எதிராக குரல் கொடுக்குறாயா என்று.

ஜெயலலிதா,அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன் மிரட்டலையெல்லாம் தூக்கி சாப்பிடும் வணம் அராஜகம் செய்கிறது தமிழ்மணம்..தமிழ்வலைப்பதிவர்களை கொத்தடிமை போல பாவிக்கிறது...அதில் இணைப்பவர்கள் தனக்கு எதிராக பேசினால் நீக்கிவிடுவார்களாம், என்ன கொடுமை..?

தமிழில் நான்தான் எழுதுகிறேன்..கருத்துகளை நான்தான் கொட்டுகிறேன்.என் எழுத்தை உன் பக்கத்தில் ஓசியில் காட்டுகிறாய்...இது போல பல நண்பர்களின் எழுத்து குவியலை உன் பக்கத்தில் காட்டி சந்தை படுத்தி திரட்டி நடத்துகிறாய்..சொல்ல போனால் நீதான் எங்கள் பதிவுகளை காப்பிபேஸ்ட் செய்து பிழைக்கிறாய்...கஷ்டப்பட்டு எழுதறது நாங்க..அதை நோகாம திரட்டிட்டு என்னென்னா சட்டம் பேசுற நீ..?

ஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு அதிக உரிமையா? விற்று தருபவனுக்கு அதிக அதிகாரமா..?

எங்களை வைத்து ஹிட்ஸ் அடித்துவிட்டு இன்று உனக்கு அதிக ஹிட்ஸ் தருகிறேன்..எனக்கு பணம் கொடு என எங்களிடம் கேட்க ஆரம்பித்துவிட்டாய்...வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்த அதே வியாபார தந்திரம்..நாளை இணைக்கும் ஒவ்வொரு பதிவரும்...குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என்பாய்..? 


டெரர் கும்மியில் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர்களை கூட தமிழ்மணம் திரட்டியில் இருந்து நீக்குவோம் என ஈமெயில் அனுப்ப எவ்வளவு துணிச்சல்..தைரியம்..? சில பிரபல பதிவர்கள் நமக்கு தெரிந்தவர்களும் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.அவர்களின் வேலைதான் இது...

தமிழ்மணம் எப்போ பணம் கேட்க ஆரம்பித்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் சந்தி சிரித்து விட்டது...ங்கொய்யாலே நீ என் பதிவை திரட்டி செய்றது தமிழ் சேவைன்னா அப்புறம் யோசித்து நானே எழுதும் பதிவு என்ன மலையாள சேவையா..? 

வருசம் ரெண்டு புக்கை பத்து பதிவருக்கு கொடுத்து சிறந்த பதிவர் விருது கொடுத்துட்டா நீ தமிழுக்கு ஒரே புடுங்கா புடுங்கிட்டன்னு அர்த்தமா..? நீ  இப்போ பண்ற வேலை எல்லாமே பணம் சம்பாதிக்கத்தான்னு தெரியும்...ஆனா அதுக்கும் இவ்வளவு அதிகாரம்,மிரட்டல்..?

நான் சோதிடம் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு..? என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா..? தமிழ் வளர்க்கிறாராம் தமிழ்..என் தமிழ் இலக்கியத்திலும் ,புராணத்திலும் எங்கு நிமித்தம் இல்லாமல் இருக்கிறது..? 

டிஸ்கி;நான் உறுதியாக சொல்லமுடியும்..தமிழ்மணம் சோதிட பதிவுகள்,காப்பிபேஸ்ட் பதிவுகள் இணைக்க மாட்டோம் என வடிகட்டுவதற்கு காரணம் அவர்கள் தமிழ் தொண்டு அல்ல.நூற்றுக்கணக்கான ப்ளாக்குகளை தமிழ்மணம் கட்டண சேவைக்கு திருப்ப வேண்டும் என்பதே, இதுவே இப்போது அவர்களின் அடிப்படை அவர்கள் கொள்கை.இது இன்னும் கொஞ்சம் நாளில் பச்சையாகவே தெரியும்.
அதற்காக நாசூக்காக ,அழகான எழுத்துகளில் பூசி மெழுகி கதை விடுவார்கள். தமிழ் பதிவர்களை நாங்கள்தான் வளர்க்கிறோம்..நாங்க இல்லைன்னா தமிழே அழிஞ்சிரும்..இன்னும் எத்தனை நாளைக்குடா இதையே சொல்வீங்க..? 

என் பதிவுகளை இண்ட்லியில இணைச்சா,தமிழ்வெளியில இணைச்சா,என் பதிவு உலகம் முழுக்க போகாதா..?

என் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு கூட போகும்...

தமிழ்மணம் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவுகள்;


தமிழ்மணம் என்றதொரு சர்வாதிகாரம்.



தமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ!!!


தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!





வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி horoscope;virgo

(உத்திரம் 2 ஆம் பாதம் முதல்;அஸ்தம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை)

கன்னி ராசிக்காரர் என்றாலே,அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் நீங்கள்.கன்னி புதன் ராசி என்பதால் உங்களிடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.வசியமன பேச்சு திறன் உங்கள் ப்ளஸ்.ஜோசியம்,மாந்திரீகம்,ஆன்மீகம்,சித்தர் வழிபாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்.எண்கணிதம்,ஜோதிடம் தொழிலாக கொண்டவர்களும் மிதுனம்,கன்னி,தனுசு ராசிக்காரர்கள் நிறைய உண்டு.காரணம் அடிப்படையான இவர்கள் கணிப்பு திறன்.யாரையும் பார்த்தவுடன் அவர் குணங்களை மதிப்பிட்டு விடுவீர்களே.


புதன், 12 அக்டோபர், 2011

ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்

ஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்;


உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கணிப்பு என்பதை விட தமிழ்க முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த ஜோதிட ஆர்வலர்.அவர் விஜயகாந்தை கழட்டி விடும்போதே புரிந்து போனது..குரு வக்ரத்தில் மரியாதை,கெளரவம்,தயாள குணம் எல்லாம் கெட்டு போகும் காலம் இது .எனவே அ.தி.மு.க தலைவர் இப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.

குரு வகரம்னா என்ன..? குரு வின் கடும்கோபம்.சூரியனின் உக்கிர பார்வையில் இப்போது குரு இருப்பதால் குரு கடும் கோபத்தில் இருக்கிறார்.இது டிசம்பர் 26 வரை காணப்படும்.இதனால் குருவின் இயல்பான குணங்களான தாராளம்,தர்ம சிந்தனை,தெய்வீக பண்பு,ஆகியவை கெட்டு விடுகிறது.உலகில் குரு ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும்.

ஜெயலலிதா அவர்களின் சிம்ம ராசிக்கு குரு பாதகமானாலும் (இப்போதைய நிலைபடி) அவருடைய லக்கினமாகிய மிதுனத்திற்கு குரு கெட்டவன் என்பதால் ,கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அடிப்படையில் டிசம்பர் 26 வரை அவர் நினைத்ததை நடத்தி தர வேண்டுமே...? அந்த வகையில் தன் வெற்றி இமாலய வெற்றியாகத்தான் இருக்கும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியையும் கைப்பற்றியே தீருவோம் என அவர் நம்புகிறார் ....

செவ்வாய், 11 அக்டோபர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo;

மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை;

யாரிடமும் எதற்காகவும் ,அவமானப்படாத,தலை குனிந்து வாழ சகிக்காத ராசிக்காரர் நீங்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்.எதிரிகள் கையோங்கினாலும் காத்திருந்து அவர்களை புறக்கணிப்பதில் பாடம் புகட்டுவதில் வல்லவர் நீங்கள் (ஜெயலலிதாவை கற்பனை செய்ய வேண்டாம்.ஒவ்வொரு சிம்ம ராசியினருக்கும் இந்த குணம் உண்டு)

பூரம் நட்சத்தினர் நல்ல வசதியான வாழ்வை படிப்படியாக பெற தொடங்குவர்.இவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும்.ஆடி மாதம் பூரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களிடம் தனித்துவமான திறமைகள் இருக்கும்.மகம் நட்சத்திரம் காரர்கள் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை பெறுவர்.கோயில் காரியங்களை,மக்களை ஒருங்கிணைத்து சமூக புரட்சி செய்வதில் வல்லவர்.தர்ம சிந்தனை அதிகம் உடையவர்.உத்திரம் நட்சத்திரகாரர்கள் அரசு சார்ந்த துறையில் இருப்பர்.உயர்ந்த அந்தஸ்து மனிதர்களின் நட்பை பெற்றிருப்பர்.கோபம் அதிகம் மகம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.

2012 எண்கணித பலன்கள் astro numerology

2012 எண்கணித பலன்கள் astro numerology;

எண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.


1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.

திங்கள், 10 அக்டோபர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horoscope

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம்

புனர்பூசம் 4ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம்;

கடக ராசி ஒரு நீர் ராசி.லக்கினங்களில் புனிதமானது,உயர்ந்தது கடகம்.பெரிய மகான்களின் ராசி,லக்கினம் கடகம்.பெரிய தலைவர்களின் ராசி,லக்கினம் கடகம்.இதன் அதிபதி சந்திரன்.இவர் மனதிற்கும்,வசியத்திற்கும் அதிபதி அல்லவா.அதனால் இந்த ராசிக்காரர்கள் அறிவாளிகளாகவும்,பிறரை மயக்கும் பேச்சு திறமை உடையவர்களாகவும்,அழகாகவும் இருப்பார்கள்,சபையில் இவர்கள் இருந்தால் அதன் மதிப்பே தனி.கம்பீரமும்,இனிமையும் இவர்களிடம் அழகாக வெளிப்படும்.உயர்ந்த லட்சையங்களை கொண்டவர்கள்.கற்பனாவாதிகள்..சிந்தனசக்தி கொண்டவர்கள்,பிறருக்கு இவர்கள் சொல்லும் புத்திமதி மிக சரியாக இருக்கும்.இவர்கள் ஆலோசனையால் வெற்றி பெற்றவர்கள் பலர்.அதனலோ என்னவோ என்னால பலன் அடைஞ்சவங்க ஏராளம்.ஆனா என்னால உயர முடியலையே என இந்த ராசிக்காரர்கள் சிலர் புலம்புவர்.

ஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2

குரு ஒரு வருடத்தில் 3 வீட்டிற்கு மாறினால் 2 கோடி பேர் மரணம் அடைவார்கள்.,இலங்கை இன அழிப்பு,காலத்தில் குரு 3 வீடுகள் அதாவது ராசிகளுக்கு மாறியது.அப்போதைய காலத்தில் வெள்ளம்,போர் இவற்ராலும் மக்கள் அதிகமானோர் அழிந்தனர்.இந்த தகவல் காலப்பிரகாசிகை என்ற பழம்பெறும் ஜோதிட நூல் சொல்கிறது.
----------------------------

தயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்

தயாநிதி மாறன் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் இந்தியா முழுவதும் இன்று காலை முழுவதும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் இப்போது பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்த,தொழிலில் அசுர வளர்ச்சி காட்டிய இந்த சகோதரர்களையும் விழுங்க போகிறது.கலாநிதி மாறன் இப்படி களி திங்கவா இவ்வளவு வேகமா முன்னேறினீங்க..? நீங்களும் ஒரு அம்பானியாகி என் தந்தை முரசொலி மாறனின் கனவு என 500 ரூபாய்க்கு டிடிஹெச் தருவீங்க..101 ரூபாய்க்கு தமிழனை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டில்லி கூட்டிட்டு போய் தொழில் புரட்சி பண்ணி உலகையே திரும்பி பார்க்க வைப்பீங்கன்னு நினைச்சேன்.இப்படி சில்லறைதனமா நடந்துகிட்டு மாட்டீகிட்டீங்களே சார்?

சன் டிவி வளர்ச்சி சாதாரண வளர்ச்சி அல்ல..இந்தியாவின் இயக்க சக்திகளில் முக்கியமானவர்கள் டாடா,அம்பானி,லட்சுமி மிட்டல் என்றால் அவர்களுக்கு அடுத்த இடம் நோக்கி மீடியா லைனில் முன்னேறியவர் கலாநிதி.அதற்கு இந்திய அரசு இயந்திரத்தை முற்றாக சுழல விட்டவர் தயாநிதி.5 வருடங்கள் அரசு இயந்திரத்தை தன் அண்ணன் கம்பெனிக்கு அடிமையாக்கியதற்கு தண்டனைதான் இப்போது அண்ணன்,தம்பி அனுபவிக்க போவது.....

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்

ஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்;



சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் யாரையும்,எதையும் பார்த்தவுடன் பார்த்தவுடன் கண்களால் எடை போடக்கூடியவர்கள்.அப்ப அவங்களுக்கு தராசே தேவையில்லையான்னு கேட்க கூடாது.இவர்களுக்கு ஒரு பட்டப்பெயரும் ஊரார் வைப்பார்களாம்...
-----------------
சுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.
-------------
ஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு..
------------
கர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.

-------------
லக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.

--------
வளர்பிறை சந்திரன் 12 ல் இருந்தால் 50 நாடுகளுக்கு செல்வான்.கோயில் கட்டி கும்பாபிசேகமும் செய்து வைப்பார்களாம்...( என் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கு...சந்திர புத்தி வரும்போது இந்த யோகம் என் ஜாதகத்துக்கு பலன் தரும்னு நினைக்கிறேன்...அதுக்கு இன்னும் சில வருடம் இருக்கு)

ஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips

ஜோதிடம்;புதுமையான குறிப்புகள்;

ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான நாட்கள் வரும் இல்லையா.அதாவது ஆடி மாதத்தில் ஆடிப்பூரம்,வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம்,சித்திரை மாதத்தில் சித்ரா பெளர்ணமி, என வரும் சிறப்பான நாட்களில் பிறப்பவர்கள் வாழ்வில் தனித்திறமை,தெய்வ அருள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

---------------------------------
ஜாதகத்தில் அசுர குரு தேவ குரு சாரத்தில் இருந்தாலும் தேவ குரு அசுர குரு சாரத்தில் இருந்தாலும் சிறப்பான பலன் இல்லை.
-----------------------
நீங்கள் விருச்சிக லக்னம்,விருச்சிக ராசியா...உங்களுக்கு முருகன் அருள் பரிபூரணமாக உண்டு.முருகன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.

நீங்கள் மீன லக்னம் ,மீன ராசியா நீர் நிலைகள் அருகில் குடியிருந்தால் ,அதாவது குளம்,ஆறு முன்னேற்றம் உண்டாகும்.

------------------------------
ஜாதகத்தில் சுக்கிரன்,சனி பார்வை உறவுகளை முறித்துவிடும்.
திருமண பொருத்தம் பார்க்கும்போது கும்பம்,சிம்மம் சேர்க்க கூடாது.
மகரம்,கடகம் ஆகாது
-----------------------
சனி,புதன் இணைந்து லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால் அவர்கள் உளறினாலும் இனிமையாக இருக்குமாம்..அவ்வளவு சிறப்பான பேச்சு திறமை.
------------------
விரயாதிபதி எனப்படும் 12 க்குடையவன் ஜாதகத்தில் லக்கினத்துக்கு இரண்டில் இருந்தால் எதை விற்றாலும் லாபம்.
---------------------
அஷ்டவர்க்கம் பலன் பார்க்கும்போது,3,6,8,12 ஆம் கட்டங்கள் எண்ணிக்கையில் வலுக்கக்கூடாது..
---------------
குழந்தை பிறக்கும்போது கொடி சுற்றி பிறத்தல் இருக்கு இல்லையா.அது இயல்புதான் அதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா.காலம் காலமாக அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் குடும்பம் எப்படி மாறியது என்பதை கணித்து நம் முன்னோர் பழமொழியே சொல்லியிருக்கின்றனர்.மாலையுடன் பிறந்த குழந்தை மன்னனுக்கு ஆகாது.
கொடியுடன் பிறந்த குழந்தை கோட்டைக்கு ஆகாது.

மன்னன் என்பது குழந்தையின் தந்தையை குறிக்கும்.
கோட்டை என்பது குடியிருக்கும் வீட்டை குறிக்கும்.

குழந்தை பிறந்ததும் கடன் பிரச்சனை ஏற்பட்டு வீடு இழந்தவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.

சனி, 8 அக்டோபர், 2011

முரண் ; பார்க்க வேண்டிய சினிமா

முரண் சினிமா ;

ஒரு பரபரப்பு திரில்லிங்கான கேரக்டரை அதே சமயம் ஓவர் வில்லத்தனம் இல்லாத கேரக்டரை தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.இந்த படத்தில் பிரசன்னா செமயாக கலக்கியிருக்கிறார்.அஞ்சாதே வில்லனை விட எனக்கு இந்த வில்லன் பிரசன்னா ரொம்ப பிடிச்சிருக்கு.


சேரன் வழக்கம்போல அழுது வடியும் முகம்.மாமனாரிடம் அடி வாங்கும் மருமகனாக நடித்தது முதல் அந்த முகத்தை இன்னும் கழட்டி வைக்கவே இல்லை சேரம்.திருந்துங்க சார்.எப்ப பார்த்தாலும் எதையோ அப்புன..மாதிரி..முகத்துல எப்பவும் இறுக்கம்.இந்த படத்து கேரக்டர் அப்படித்தான்.ஆனா அடுத்த படத்துலியும் இது தொடர்ந்தா ஆம்பளை அழுமூஞ்சி நடிகர் ஆகிடுவார் சேரன்.

பிரசன்னா வுக்கு தந்தையால் தொல்லை.சேரனுக்கு மனைவியால் தொல்லை.இருவரும் சந்திக்கின்றனர்.இருவரும் சந்தோசமா இருக்கணும்னா...இவங்க ரெண்டு பேரும் இருக்க கூடாது..கொல்லணும்.அதே சமயம் ரெண்டு பேரும் மாட்டிக்க கூடாது.அதுக்கு ஒரு வழி..உங்க மனைவியை நான் கொல்றேன்.என் அப்பாவை நீங்க கொல்லுங்க என டீல் பேசுகிறார்.இதற்கு சேரன் மறுக்கிறார்.சேரன் மனைவி விபத்தில் இறக்க...பிரசன்னா அது விபத்தல்ல..நாந்தான் கொன்னேன்.நம்ம டீல் இப்ப ஆரம்பம் என சேரனிடம் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படம் செம வேகம்..சஸ்பென்ஸ்...ஹீரோயின் இருவரும் மனதில் பதியவில்லை..இசையை போலவே...

பிரசன்னாவின் அப்பா...கேரக்டர் மட்டுமே மனதில் தங்குகிறது...படம் முழுக்க ஆக்கிரமிப்பது பிரசன்னா.மாங்காய் திருட்டுதனமாய் பறிக்க முதலில் பிரசன்னா சென்று வந்ததும்,இப்ப நிங்க போங்க என்பார்..சேரன் பயந்து பயந்து போய் பறித்துவிட்டு வரும்போது...பிரசன்னா ,திருடன் என சத்தம் போட...சேரன் முகத்தை பார்க்கணுமே..

மனிதர்களில் இருக்கும் கேரக்டர்களில் அதிகப்படியானவை சேரன் மற்றும் பிரசன்னா.இருவருமே முரணானவர்கள்.இந்த படம் செம திரில்லிங்கா...ஸ்வாரஸ்யமா இருக்கு...அவசியம் பாருங்க...

2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini

2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் GEMINI

மிருகசிரீடம் 3 ஆம் பாதம் முதல்,திருவாதிரை,புனர்பூசம் 3 ஆம் பாதம் வரை.

எதையும் ப்ளான் பன்ணி பண்ணனும் என்பதை தாரக மந்திரமாக கொண்ட புதன் அதிபதி ராசிக்காரர் நீங்கள்.இந்த ராசியினருக்கு உடல் உழைப்பு இல்லை.மூளை உழைப்பு தான்.ஃபோன் டீல் ல லட்சக்கணக்குல சம்பாதிப்பவர்,பணம் கொடுத்து வாங்காமலே கைமாத்திவிட்டு காசு அள்ளுறவங்க..இவங்கதான்.கணக்கு தான் எல்லாமே என இவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் செமயாக கல்லா கட்டும்.

இன்று முதல் 2012 தொடங்கும் வரை இருக்கும் கிரக நிலைகள் பார்த்தால் வரும் டிசம்பர் 26 வரை குரு வக்ரம்.இது உங்களுக்கு சாதகமானது.இதனால் வருமானம் உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பு,சிலருக்கு திருமன காரியங்கள் கைகூடல்,வரவேண்டிய பணம் வந்து சேரும்.குரு களத்திரகாரகன் கெட்டிருப்பது மனைவியால் வாக்குவாதம்,சங்கடம் உண்டாகலாம்..அல்லது அவர்களால் விரய செலவுகள் உண்டாகலாம்..

நவம்பர் 1 ஆம் தேதி சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்துக்கு செல்கிறார்.இது பூர்வ புண்ணிய,புத்திர ஸ்தானங்களை பாதிக்கும் இடங்கள்.குழந்தைகள் சம்பந்தமான சேமிப்பு,கல்வி,திருமண முதலீடுகள் அதிகரிக்கும்.முன்னோர் வழி சொத்துகள் வில்லங்கம் உண்டாகும்.

5ன் ஆம் இடம் என்பது பல நீண்ட நாள் தெய்வ வழிபாடுகள் அல்லது வேண்டுதலை நிறைவேற்றும் காலமாகும்.உறவினர்களை அழைத்து விருந்து வைத்தால் இக்காலகட்டத்தில் மிக நல்லது.அதாவது 2012 ஜனவரிக்கு மேல்.

சபரிமலை ஐயப்பன் வழிபாடு,திருப்பதி சென்று இரண்டு நாள் தங்கி பெருமாள் தரிசனம் செய்வது பல புண்ணியங்களை சேர்க்கும்.வரக்கூடிய இரண்டரை வருடம் புண்ணியம் சேர்க்கும் காலமாகியால் அன்னதானம்..ஊனமுற்றோருக்கு உதவி என யோசியுங்கள்..இதனால் என்ன பலன்னு யோசிச்சுகிட்டே இருக்காதீங்க.சந்தேக குணம் ,ஆராய்ச்சி குணம் இருக்க வேண்டியதுதான்.அதை ஓவரா வளர்த்துக்காதீங்க..மனைவிகிட்ட எப்ப பார்த்தாலும் நொய் நொய்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்காம ,உங்க திறமைகளை வளர்த்துக்கோங்க...

வெள்ளி, 7 அக்டோபர், 2011

தீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு!

தீபாவளி மட்டுமில்லாமல் எந்த பண்டிகைன்னாலும் ,நம்ம சந்தோசத்தை விட,அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான் பெரிய சந்தோசம்!


ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும்,மாற்று திறனாளிகளுக்கும் 1995 ஆம் வருடம் முதல் திருமதி மேனகா.செல்வம் அவர்கள் உதவி செய்துவருகிறார்.இவர் எங்க ஊர்தான்.எனது ஜோதிட வாடிக்கையாளரும் கூட.இவரது கணவர் சித்தோடு காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர்.இந்த வருடமும் தீபாவளிக்கு பல ஆதரவற்ற/உடல் ஊனமுற்றோருக்காக இந்த தம்பதிகள் help trust என்னும் பெயரில் பதிவு செய்து, உதவி செய்ய முயற்சித்து வருகின்றனர்..அவர்களுக்கு நாமும் உதவி செய்யலாம்!

விரும்புபவர்கள்; menaga9191@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்! செல்;9894556828

மேலே இருக்கும் படத்தை க்ளிக் செய்து பார்த்து மெலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள்! நன்றி!!

முடிந்தவரை உதவுவோம்..இயலாதவருக்கே!!

புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்;

புலிப்பாணி சித்தரின் பாடல்;

ஆரப்பா யின்னமொரு புதுமையை கேளு
அம்புலியும் அசுரகுரு யேழில் நிற்க
கூரப்பா கிழவனுக்கு மாலையிட்டு
குமரியவள் மதனத்தால் பலனை கூடி
சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து
சிறப்பாக தொட்ட்லிட்டு ஆட்டுவாளாம்
பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான்
பாங்கியவள் ஸ்தனங் குலுங்க வருவாள் பாரே.

பாடல் விளக்கம்;

புதுமையான இன்னொரு ஜாதக அமைப்பை கூறுகிறேன்.கூர்மையுடன் கேட்டுக்கொள்.சந்திரனும்,சுக்கிரனும் லக்கினத்துக்கு ஏழில் நின்றால் இந்த ஜாதகி கிழவனுக்கு மாலையிடுவாள்.ஆனால் மனநிறைவில்லாது காம உணர்வினால் பல ஆண்களுடன் கூடி ஒரு குழந்தையும் பெற்றெடுப்பாள்.அந்த பாலகனை ஊரார் பிரமிக்க சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாள்.இவள் பல ஆண்கள் பார்த்து மயங்கும்படி ஸ்தனங்கள் குலுங்க வெளியில் ந்டமாடுவாள் என்று கூறலாம்..


என் விளக்கம்..;இந்த பாடல் நடைமுறையில் ஒத்து வருகிறதா என கேட்டால்,நிறையவே ஒத்து வருகிறது.ஆனால் மேற்க்கண்ட ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் அமையும்.சுக்கிரனும்,சந்திரனும் கூடுவது இயல்பு என்றாலும் லக்கினத்தில் 7 ல் கூடுவது ரொம்ப குறைவு.அப்படி அமைப்பு இருப்பினும் சுப கிரக பார்வை இருப்பின்,இந்த பாதிப்பு சற்று குறையும்.கிரகங்கள் நல்ல கிரகத்தின் சாரம் பெற்றால் இன்னும் கெடு பலன் குறைய வாய்ப்புண்டு.ஆனால் சந்திரன்,சுக்கிரன் இணைவு காம உணர்வை மிக அதிகமாக்கும் என்பது என் ஜோதிட அனுபவத்தில் உண்மை..

ஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்


திருமண நட்சத்திர பொருத்தம் 
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்கு
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி
பரணி
திருவாதிரை,
பூசம்,
பூராடம்,
திருவோணம்,
சதயம்
2.
பரணி
புனர்பூசம்
உத்திராடம்,
ரேவதி,
அஸ்வனி
3.
கார்த்திகை 

ம் பாதம்
சதயம்
4.
கார்த்திகை 
2, 3, 4 
ம் பாதங்கள்
சதயம்
5.
ரோகிணி
மிருகசீரிஷம் 
1, 2, 
புனர்பூசம் 

4, 

உத்திரம்
1, 
பூரட்டாதி
பரணி
6.
மிருகசீரிஷம் 
1, 2 
ம் பாதங்கள்
உத்திரம் 
1, 
உத்திராடம் 

2, 3, 4, 

திருவோணம்
சதயம்
அஸ்வனி
ரோகிணி
7.
மிருகசீரிஷம் 
3, 4 
ம் பாதங்கள்
திருவாதிரை
உத்திரம்,
அஸ்தம்,
மூலம்,

உத்திராடம் 

2, 3, 4, 
சதயம்
பரணி
8.
திருவாதிரை
பூரம்
பூராடம்,
பரணி,

மிருகசீரிஷம் 

3, 4
9.
புனர்பூசம் 
1, 2, 3 
ம் பாதங்கள்
அவிட்டம் 
3, 4, 
உத்திரட்டாதி,

மிருகசீரிஷம் 

3, 4
10.
புனர்பூசம் 

ம் பாதம்
பூசம்
சுவாதி,
அவிட்டம்
1, 2, 
உத்திரட்டாதி
மிருகசீரிஷம்
11.
பூசம்
ஆயில்யம்
அஸ்தம்,
சுவாதி,
விசாகம்
1-2-3, 
பூரட்டாதி 
4, 
ரேவதி,

திருவாதிரை
,

புனர்பூசம்
12.
ஆயில்யம்
சித்திரை
அவிட்டம் 

1, 2
13.
மகம்
சதயம்
14.
பூரம்
உத்திரம் 
1, 
பூரட்டாதி 

1, 2, 3, 

அஸ்வனி
15.
உத்திரம் 

ம் பாதம்
சுவாதி
அனுஷம்,
பரணி,
ரோகிணி,
பூசம்,
பூரம்
16.
உத்திரம் 
2, 3, 4 
ம் பாதங்கள்
அனுஷம்
பூராடம்,
ரோகிணி,
பூசம்,
பூரம்
17.
அஸ்தம்
பூராடம்
உத்திராடம் 

1, 

ரேவதி,

மிருகசீரிஷம்
,
பூரம்,
ஆயில்யம்,

கார்த்திகை 

2, 3, 4
18.
சித்திரை 
1, 2 
ம் பாதங்கள்
கார்த்திகை 
2, 3, 4, 
மகம்
19.
சித்திரை 
3, 4 
ம் பாதங்கள்
கார்த்திகை 
1, 
மகம்
20.
சுவாதி
பூராடம்
அவிட்டம் 

1, 2, 

பரணி,

மிருகசீரிஷம் 

3, 4, 
பூரம்
புனர்பூசம்
21.
விசாகம் 
1, 2, 3 
ம் பாதங்கள்
அவிட்டம் 
1, 2, 
சித்திரை 

3, 4
22.
விசாகம் 

ம் பாதம்
அவிட்டம்
சதயம்,
சித்திரை
23.
அனுஷம்
கேட்டை
சதயம்,
பூரட்டாதி
1, 2, 3, 
ரோகிணி
புனர்பூசம்,
ஆயில்யம்,
அஸ்தம்,
சுவாதி
24.
கேட்டை
கார்த்திகை 
2, 3, 4
25.
மூலம்
உத்திரட்டாதி
பூரம்,
சுவாதி,
பூராடம்
26.
பூராடம்
பூரட்டாதி
புனர்பூசம் 

1, 2, 3, 

உத்திரம்
ரேவதி
27.
உத்திராடம் 

ம் பாதம்
உத்திரட்டாதி
திருவாதிரை,
பூரம்,
பூராடம்,
அஸ்தம்,
சுவாதி
28.
உத்திராடம் 
2, 3, 4 
ம் பாதங்கள்
உத்திரட்டாதி
பரணி,
பூசம்,
அஸ்தம்,
அனுஷம்,
பூராடம்
29.
திருவோணம்
அவிட்டம் 
1, 2, 
பூரட்டாதி 

4, 

பரணி,

புனர்பூசம் 

4, 
உத்திரம் 
2, 3, 4, 
சித்திரை
கேட்டை,
பூராடம்
30.
அவிட்டம் 
1, 2 
ம் பாதங்கள்
கார்த்திகை 
1, 
மூலம்
31.
அவிட்டம் 
3, 4 
ம் பாதங்கள்
கார்த்திகை
சதயம்,
மகம்,
மூலம்
32.
சதயம்
சித்திரை 
3, 4, 
விசாகம்,
அவிட்டம்
3, 4
33.
பூரட்டாதி 
1, 2, 3 
ம் பாதங்கள்
மிருகசீரிஷம் 
1, 2, 
சுவாதி,
அனுஷம்
34.
பூரட்டாதி 

ம் பாதம்
உத்திரட்டாதி
மிருகசீரிஷம்,
அனுஷம்
35.
உத்திரட்டாதி
ரேவதி
திருவாதிரை,
ரோகிணி,

புனர்பூசம் 

1, 2, 3, 
அஸ்தம்
திருவோணம்,
பூரட்டாதி
36.
ரேவதி
மிருகசீரிஷம்
புனர்பூசம் 

1, 2, 3, 

உத்திரம் 
2, 3, 4, 
அனுஷம்
உத்திரட்டாதி